The Way Home - அன்பின் அழகு


உலகில் உன்னதமான உறவுகளில் ஒன்று பாட்டி - பேரன் உறவு. தாய் சேய் உறவு தான் முதன்மை என்றாலும் , பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அனைவருக்கும் ஒரு படி மேல் பாட்டியின் அன்பு.கட்டுபாடுஅற்ற , அளவில்லா பாசம் மற்றும் குறைவில்லா சுதந்திர வாழ்கை பாட்டியின் அரவணைப்பில் கட்டாயம் கிடைக்கும். அப்படி வளைந்த எனக்கு " தி வே ஹோம் " என்ற படம் பெரும் தாக்கத்தை எற்படுதியது.

சீயோல் நகரில் பிறந்து வளர்ந்த "சங்க் வூ" தன் தாய் வழி பாட்டியிடம் சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . "சங்க் வூ " வின் அம்மாவுக்கு புது பணி தேட வேண்டிய அவசியத்தால் , தன் அம்மாவிடம் சிறிது காலம் விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

எழுபத்தி எட்டு வயதான, ஊமை பாட்டியின் குடிசையில் போதிய மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி கிடையாது . மேலும் பாட்டியிடம் இல்லை என்பதே அதிகம் . தான் சீயோலீல் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களும் விளையாட்டு பொருள்களையும் கொண்டு தன் பொழுதை கழிக்கும் சங்க் வூ , தன் பாட்டி காட்டும் அன்பை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறான்.

காலபோக்கில் தான் கொண்டு வந்த நிகழ்பட விளையாட்டு (video game ) மின்கலம் (battery) தீர்ந்து விட தன் பாட்டியிடம் புதிய மின்கலம் (battery) வாங்கி தர வேண்டுகிறான், பாட்டியோ பணமில்லாத காரணத்தால் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள் . ஆத்திரம் அடையும் சங்க் வூ பாட்டியின் காலணிகளை எங்கோ எரிந்து விட்டு பாட்டி பயன்படுத்திய பீங்கான் சாடினயய் எத்தி உடைத்து விடுகிறான். விளையாட வழில்லாமல் , தன் பாட்டி தூங்கும் நேரம் பார்த்து அவள் வெள்ளி கொண்டை ஊசியை திருடி தனக்கு தெரிந்த பாதயில் மின்கலம் (battery) வாங்க செல்கிறான். பல கடைகளில் கேட்டு கிடைகாததால் ஊருக்கு வெளியே ஒரு கடையில் கிடைக்க, அதை வாங்க தன் பாட்டியின் ஆபரணத்தை விற்க முயல, கடைக்காரனோ பாட்டிக்கு தெரிந்தவன் போலும் அவனை தலையில் தட்டி பாட்டியிடம் கொடுக்க சொல்லுகிறான்.


இத்தனை சேட்டைகளையும் செய்யும் சங்க் வூ ,பாட்டி
அவனிடம் கேட்கும் ஒரே உதவி ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுப்பது மட்டுமே அதையும் திட்டி
கொண்டே
கோர்த்துக்கொடுகிறான்.

ஒரு நாள் பாட்டியிடம் பொறித்த கோழியை தின்னக்கேட்க,சங்க் வூ காட்டிய இயே சைகையில் கோழி மட்டுமே அவளுக்கு புலப்படுகிறது.உடனே தான் வளர்த்த பூசணிகளை விற்று மழையில் நனைந்தவாறே கோழியை வாங்கி வந்து அவனுக்கு வேக வைத்த கோழி சமைத்து தருகிறாள்.தான் கேட்ட பொறித்த கோழியை சமைத்து கொடுக்காததால் ஆத்திரம் அடையும் சங்க் வூ உணவை எத்தி விட்டு அழுது கொண்டே உறங்கி விடுகிறான்.நடு இரவில் பசி எடுக்கவே அதே கோழியை உண்டு மறுபடியும் உறங்குகிறான்.முதல் நாள் மழையில் நனைந்த பாட்டி காய்ச்சலில் படுக்கவே அக்கறையுடன் தன் போர்வையை போர்த்தி விட்டு உணவை பரிமாறுகிறான்.




ஒரு நாள் சங்க் வூவும் பாட்டியுடன் சந்தைக்கு செல்கிறான்.அங்கு பேச முடியாத தன் ஊமை பாட்டி பூசணிகளை விற்க படும் அவஸ்தைகளை கண்டு மனம் நோகிறான்.விற்ற பணத்தில் சங்க் வூவுக்கு ஷூவும்,மிட்டாயும் வாங்கி கொடுகிறாள் .அந்த ஊரில் வசிக்கும் தன் சிநேகிதியிடம் சற்று நேரம் பேசி விட்டு கிளம்ப,அந்த சிநேகிதியோ நம் இருவரில் ஒருவர் உயிர் துறக்கும் முன்னர் இன்னொருமுறை வந்து தன்னை பார்க்க வருமாறு வேண்டுகிறாள்.

ஊருக்கு போக தன்னிடம் போதிய காசு இல்லாததால் சங்க் வூவை மட்டும் பேருந்தில் அனுப்பி வைக்கிறாள் . சங்க் வூ ஊருக்கு சென்றதும் தன் பாட்டியை அடுத்தடுத்து வந்த எல்லா பேருந்துகளிலும் தேடி,பின்னர் பாட்டி நடந்தே ஊருக்கு வந்தடைந்ததை கண்டு துடித்துப்போய் "எங்கே போனாய்" என்று உரிமையோடு கேட்டு வேதனைப்படுகிறான் .


எப்போதும் தன் பாட்டியுடன் கோபமாகவும்,பாட்டியின் அன்பை உதாசீனப்படுத்தும் சங்க் வூ,காலப்போக்கில் தன் பாட்டி காட்டும் கட்டுக்கடங்காப்பாசத்தை கண்டு தன் பாட்டியின் மேல் உயிரானான்.

சங்க் வூ பாட்டியை விட்டு கிளம்பி தன் தாயிடம் செல்லும் தருணம் வருகிறது .ஆனால் சங்க் வூக்கு பாட்டியை விட்டு பிரிய மனமில்லாதிருந்தாலும் செய்வதறியாது புழுங்குகிறான் ,பாட்டிக்கு எழுதப்படிக்க தெரியாத காரணத்தால் "எனக்கு உடம்பு சரியில்லை" என்றும் " தங்கள் பிரிவினால் நான் மிகவும் வருந்துகிறேன்" என்றும் தபால் அட்டையில் வரைந்து , இவை இரண்டில் அந்த அந்த சுழ்நிலைக்கு யட்ப அனுப்புமாறு வேண்டுகிறான் . மேலும் தன் பாட்டிக்கு எல்லா ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுத்துவிட்டு மிகுந்த வேதனையுடம் அழுது கொண்டே உறங்கச்செல்றான்.

மறு நாள் தன்னை கூடிச்செல்ல வந்த தன் தாயுடன் கிளம்பிய சங்க் வூவை பிரிய மனமில்லாமல் வழியனுப்பிவிட்டு, ஆதரவாக யாருமே இல்லாத தன்னுடைய பழைய வாழ்கையை தொடர தளர்வடைந்து தன் குடிசையை நோக்கி நடந்து செல்கிறாள் பாட்டி. படமும் நெரிவு பெறுகிறது .

அன்பு என்ற மொழியால் பேசிய ஊமை பாட்டி நாம் மனதில் நீங்கா இடம் பிடிகிறாள் .

0 comments:

Post a Comment