The Banishment


அலெக்ஸ்(Alex),வேரா(Vera) தம்பதினர் கோடை விடுமுறைக்கு தங்கள் குழந்தைகளுடன் அலெக்ஸ் வாழ்ந்து வளர்ந்த கிராமத்து பண்ணைக்கு வருகின்றனர். நீண்ட நாள் உபயோகிக்கப் படாமல் இருந்த பண்ணை வீட்டை சரி செய்தவாறு தங்கள் விடுமுறையை உல்லாசமாக வாழ தொடங்குகின்றனர். ஒரு தேனீர் வேளையில் வேரா, அலெக்ஸ்யிடம் தான் கருத்தரித்து இருப்பதாகவும் அது அலெக்ஸ்யின் குழந்தையில்லை என்கிறாள் . இந்த செய்தி அலெக்ஸ்யின் மீதி வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்து விடுகிறது.

தன் பாலிய சிநேகிதர்கள் மற்றும் சகோதரர்கள் முன்னர் தங்களுக்கு பிரிவு இல்லாதது போல் வேடம் பூண்டாலும் தன் ஏமாற்றத்தை தாங்காத அலெக்ஸ், வேராவிடம் பேசாமலும், புறக்கணித்தும், வாக்கு முற்றும் போது அவளை அடித்தும் தன் ஆதிரத்தை அடக்க முயலுகிறான்.

செய்வது அறியாத அலெக்ஸ் தன் சகோதரன் மார்க்-யின்(Mark) உதவியை அணுகுகிறான். மார்க்-கை சந்திக்க செல்லும் வழியில் கிம்(அலெக்ஸ்-யின் மகன்) தனக்கு அலெக்ஸ்-யின் சகப்பணியாளன் ராபர்ட்-யை(Robert) பிடிக்காது என்றும் , அலெக்ஸ் விட்டில் இல்லாத போது ராபர்ட்-யை பார்த்தகவும் அலெக்ஸ்யிடம் கூறுகிறான். வேராவின் கர்பத்திற்கு ராபர்ட் தான் காரணம் என்றும் முடிவு செய்கிறான்.

கருவைக் கலைத்துவிட்டு , நடைந்தவைகளை மறந்து புது வாழ்க்கையை தொடங்கும் படி வேராவை வறுப்புறுத்துகிறான் அலெக்ஸ். அலெக்ஸ்-யின் வறுப்புறுத்தளுக்கு அடிப்பணிகிறாள் வேரா.மார்க்-யின் மருத்துவ நண்பரை கொண்டு கருக்கலைப்பு நடைபெற, அதில் வேராவும் இறந்து விடுகிறாள்.

வேராவின் இறுதி சடங்கு முடித்த கையோடு மன உளைச்சலால் மார்க்கும் மார்ரடைப்பால் இறந்து விடுகிறான். தன் வாழ்க்கையை சிதைத்த ராபர்ட்யை கொல்லும் எண்ணத்துடன் காரில் பயணிக்கும் அலெக்ஸ், ராபர்ட்யை எதிர்ப்பார்த்து காரிலேயே உங்கி விடுகிறான்.

உறங்கும் அலெக்ஸ்-யை எழுப்பி, தன் மனைக்கு அழைத்துச் சென்று நடந்த உண்மைகளை விளக்குகிறான் ராபர்ட்.வேராவின் கருவில் இருந்தது அலெக்ஸ்-யின் குழந்தைதான் என்றும், ஏன் வேரா அவ்வாறு சொன்னால் என்று உண்மையை விளக்குகிறான். தன் தவறை உணர்ந்த அலெக்ஸ், தன் குழந்தைகளை அழைத்து கொண்டு ஊரை விட்டு செல்வது போல படமும் நிறைவு பெறுகிறது.

பரந்து விரிந்த நிலப்பரப்பு , அழகான கிராமப்புறச் சூழல்,அபாரமான ஒளிப்பதிவு என்ற அம்சங்கள், படம் பார்பவார்களை வெகுவாக கவரும். "The Return" படத்தை இயக்கிய அண்ட்ரே ஜ்வ்யகின்த்செவ் (Andrey Zvyagintsev) இப்படத்தை இயக்கி உள்ளர் . முகதில் சலனம்யின்மை, நடிப்பில் ஆர்பாட்டம் இல்லாமல் அலெக்ஸ்கா நடித்த கொன்ஸ்டன்டின் லவ்ரோநெங்கோ (Konstantin Lavronenko) 2007 Cannes Film Festival -ளில் சிறந்த நடிகர்கான விருதை பெற்றார்.

The Diving Bell and the butterfly


சரிரம் சிறையாகி போக , சிந்தனைகள் யாவும் சிறைப்படுத்த பட, சிறுவயது முதல் தன் எண்ணங்களுக்கு கட்டுப்பட்ட கரங்களும், கால்களும் செயல் இழந்து , சிறு செயலுக்கு கூட பிறரை எதிர்நோக்கும் கொடிய நிலையாக்கிவிடுமாம் வாதம் நோய் . வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் உள் உணர்வை பிறரிடம் பகிர முடியாதபடி நாவிழந்து பலபேர் பாதிக்க கண்டு உள்ளேன். வாதம் பெரிய கொடிய நிலமை தான் என்னவோ, தன்னை ஒருவன் ஏமாற்றினால் அவன் கை,கால் விளங்காமல் போக வேண்டும் என்று சாபம் விடுகிறார்கள்.

வாதத்தால் பாதிக்கப்பட்டு வரலாறு படைத்தவர்கள் பலர், அவர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "elle" என்ற பேஷன் இதழின் பதிப்பாசிரியர் ஜீன் டொமனிக் புபி (Jean-Dominique Bauby) யும் ஒருவர். அவருடைய நாற்பதாவுது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தன் இடது கண் மட்டும் உயிர் இருக்க , பிற உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த நிலையில் " தி டைவிங் பெல் அண்ட் தி பட்டர்பிலை (The Diving Bell and the butterfly) " என்ற புத்தகத்தை எழுதி தன் வரலாறை திருத்தி எழுதியவர் . அவரை பற்றிய படம் தான் இந்த The Diving Bell and the butterfly.

படம் முழுக்க Bauby -யின் நினைவுகளோடும் , அவர் உள் உணர்வோடும் நாம் பயணிக்கிறோம். அதற்கு ஏற்றார் போலவே, ஆரம்பத்தில் ஒளிப்பதிவும் அவரின் இடது கண் பார்வையின் கோணமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.படம் துவக்கமே Bauby -க்கு லாக்-இன் ஷின்றோம்(Lock-in Syndrome) எற்பட்டுயுள்ளதகவும், தலை முதல் கால் வரை செயல் இழந்து விட்டதாகவும் அவருடய இடது கண்ணும்,சிந்தனையும் சாதாரணமாக உள்ளதாக நரம்பியல் நிபுனர் விளக்குகின்றார். பிறர் Bauby - யிடம் பேசும் போது அருகில் நின்று நேராக அவர் கண் முன்னே பேச வேண்டும் என்றும் இடது ஓரமகவோ அல்லது வலது ஓரமகவோ நின்று பேசினால் Bauby -யால் பார்க்க முடியாது என்றும் விவரிகின்றார்.

Bauby -
யை இவ்வாதத்தில் இருந்து மீட்க உடல் பயிற்சியாளர்(Physical Therapist), பேச்சுப் பயிற்சியாளர்(Speech Therapist ) உறுதுணையாக இருக்கின்றனர். பிறரிடம் பேச தன் இடது கண் மட்டும் உறுதுணையாக இருப்பதால் ஒரு உத்தியை கற்றுக் கொடுகிறாள் பேச்சுப் பயிற்சியாளர்யான முரியா(mauria).Bauby - யிடம் பேச விரும்பியவர்கள் கேள்விக்களால் மட்டுமே பேச(கேட்க) வேண்டும் என்றும், அதற்கு அவர் ஒரு முறை கண் சிமிட்டினால் "ஆமாம்" என்றும், இருமுறை சிமிட்டினால் "இல்லை" என்றும் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள் முரியா.

மேலும் Bauby - யிடம் பேசபவர் ஆங்கில எழுத்துகளை வரிசையாக சொல்ல, தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் சிமிட்டி "ஆமாம்" என்று சொல்லி, அதை போல பிற எழுத்துகளை சேர்த்து தான் சொல்ல வந்த வாக்கியத்தை கூறுகிறான். தான் பணி செய்து வந்த "elle" இதழில் எழுதி வந்த புத்தகத்தை எழுதி முடிக்க முயலுகிறான். அவன் எண்ணத்தை பதிப்பாளர்களிடம் தெரிவிக்க, சம்மதம் அளிக்கின்றனர் .தான் சொல்ல வேண்டியதை முற்றாகவும், பொறுமையாகவும் சொல்லி புத்தகத்தை எழுதி , பிரசுரிக்க செய்து , நல்ல விமர்சனம் பெறுகிறான் . புத்தகம் வெளியான சில தினங்களில் நிமோனியா(pnemonia)வால் பாதிக்கபட்டு உயிர் துறக்கிறார்.

படம் முளுக்க Bauby தன் வரலாறு விவரிதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது . வாதத்தால் பாதிக்கபட்ட தன் முகத்தை பார்க்க அவன் மனம் மறுப்பதையும் , தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கால் பந்தாட்டத்தை பார்த்து கொண்டு இருக்கையில், Bauby -யை பரிசோதித்த பணியாளர் போகையில் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு செல்லும் போது கோபத்தால் அவன் மனது குமறும்போதும், வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை நாம் உணர முடிகிறது. தன் பிறந்தநாள் அன்று Bauby - யின் தந்தை தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவிக்கும் போது , பணிப்பெண் முலமாக தன் பிரியத்தை சொல்ல , தன் மகன் சொல்வது போல வருமா என்று அழும் தந்தையை நினைத்து அழும் Bauby ஒரு நெருடலான காட்சி.

அருமையான திரைகதை , ஒளிப்பதிவு என்று விளங்குகிறது இந்த படம் . இந்த படத்தின் டைரக்டர் 2006 CANNES திரைப்படவிழாவில் சிறந்த டைரக்டர்கான விருதைப் பெற்றார் .

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்


வண்ணநிலவனின் கம்பாநதி , கடல்புரத்தில் நாவல் இருந்த போதிலும் அவரின் ரெயினீஸ் ஐயர் தெரு படிக்கும் ஆர்வத்தை எற்படுத்தியது அதன் முன்னுரை. மத்தியவர்க்க மக்களின் வாழ்கை போராட்டம், அவர்களுடைய
ஆசைகள் , வாழ்கை முறை என்று அழகாக கதை சொல்லும் பாணி அவர் பலம் என்று என் மாமா சொல்லி கேள்விப்பட்டேன்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது சாலைப்புதூர் என்ற கிராமத்தில் வசித்தோம்.எதிர் எதிரே மொத்தம் எட்டு வீடுகள், இருபுறமும் கரும்பு தோட்டங்கள். எங்கள் வீட்டின் பின்புறத்தில் பெரிய ஆலமரம் அதன் அருகே இரயில் தண்டவாளங்கள், மூன்று மணிக்கு ஒருமுறை இரயில் வருவதும் போவதுமாக தன் பணியை செய்துகொண்டு இருக்கும். எங்கள் தெரு ஒரு அழகான இயற்கை சூழ்ந்த இடம். வாரத்தின் விடுமுறை நாட்களில் கரும்பு தோட்டத்தில் விளையாடுவதும், தோட்டத்துக்கு பாயும் தண்ணீர் தொட்டியில் உல்லாசமாக குளிப்பதும், எதிர் வீட்டில் உள்ள லீமா அக்காவிடம் ராணி காமிக்ஸ், சிறுவர் மலர் படிக்க சொல்லி கேட்பதும், பிக்னிக் செல்வது போல சனிக்கிழமை தோறும் எங்களை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அல்லது மலை மேடுக்கும் அழைத்து சென்று புராண கதை சொல்லும் அன்பான கதிரேசன் அண்ணன் மற்றும் சாரதா டீச்சர்,பெரிய பாட்டி என்று அன்பான மக்கள் வாழ்ந்த தெரு. ஒரு உல்லாசமான தனி உலகம் போல உணர்ந்தோம். இன்று வரை பல ஊர்களுக்கு மாற்றலாகி போயும் சாலைப்புதூரில் கிடைத்த அக்கம்பக்கம் வீட்டார்கள் போல வேறு எங்கும் வாய்த்தது இல்லை(என் அன்னையின் கூற்றும் இதுவே)

இந்நாவலில் வரும் ரெயினீஸ் ஐயர் தெரு, அத்தெருவில் வசிக்கும் மனிதர்கள் என்று அனைத்தும் எங்கள் தெரு போலவே நடுத்தரவர்க்க மனிதர்கள், பயன் கருதி அன்பு காட்டுப்பவர்கள் இல்லை , சமுதாய வளிர்ச்சியால் நவ நாகரிகத்தை கைபிடித்தவர்களும் இல்லை. எண்பதுகளில் வாழ்ந்த மிகச் சாதாரணமான, நம் பக்கத்து வீட்டில் வாழ்ந்த அன்பான மனிதர்கள் .

ஒரு அழகான தெரு, அதில் வாழும் மனிதர்கள் , அவர்களுடய வாழ்கை போராடத்தை வைத்து மிக நேர்தையாகவும் அழகாகவும் கதையமைத்து உள்ளார் கதாசிரியர். மேலும் ரெயினீஸ் ஐயர் தெரு மக்கள் யாவரும் மழைக்கு அடிமையாக சித்தரித்து, வாசிப்பவர்கள் மனதில் ஒரு இனிமையான எண்ணத்தையும் எற்படுத்துகிறார். எனோ இந்த நாவல் வாசிப்பின் முடிவில் எங்கள் சாலைப்புதூர் கிராமத்தெரு வைத்து கதை அமைத்தது போல ஒரு எண்ணம் படுகிறது. வாசிப்பவர் அனைவர்க்கும் இந்த எண்ணம் தோன்றும்.

நினைவுகள் அழகாக உள்ளபோது எண்ணங்கள் இனிமையாக
இருக்கும்.

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன், கிழக்கு பதிப்பகம், ரூ 70


வாடிவாசல் - சி.சு.செல்லப்பா


அமரர் சி.சு.செல்லப்பாவின் அறிமுகத்தை எஸ். ரா வின் வாசக பர்வம் கட்டுரையில் அறிந்தேன். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்ததாகவும், எழுத்து மற்றும் மணிக்கொடி இதழ்களை நடத்த செல்லப்பா பட்ட இன்னல்களையும் பதிவு செய்திருந்தார்.அவர் படைப்பில் ஒன்றான வாடிவாசல் தமிழ் இலக்கியத்தில் மகுடம் சூட்டப்பட்ட குறு நாவல்களில் ஒன்று.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

ஜல்லிகட்டை விருமாண்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் பார்த்த எனக்கு வாடிவாசல் வாசிப்பின் முடிவில் நேரில் கலந்து கொண்ட அனுபவத்தை ஏற்படுத்தியது.ஏறுத்தழுவல் நாளன்று அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் முதல், ஜமீன்தாரின் காரிக் காளையை அடக்கப்பட்டது வரை நடக்கும் நொடிப்பொழுது சம்பவங்களை கதையாக்கப்பட்டுள்ளது.

பிச்சியும்,மருதனும் மாபிள்ளை மச்சினன்.பிச்சியின் தந்தையை முந்தைய ஜல்லிக்கட்டில் கொன்ற ஜமீன்தாரின் காரிக்காளையை அடக்க வாடிவாசலை களமாக தேர்ந்து எடுக்கிறான் .வாடிவாசல் கூட்டத்தில் கிழவன் கொடுக்கும் நுட்பமான தகவல்களை கொண்டு பிறர் அடக்க அச்சப்படும் பிள்ளைக்,கொராலு காளைகளை அடக்கி கூட்டத்தின் மரியாதையைகளையும்,மதிப்புகளையு
ம் பெறுகிறான் பிச்சி.காரிக்காளையை அடக்கவே வந்துள்ளான் என்று அஞ்சும் ஜமீன்தார் அவர் எண்ணத்தை போலவே காரிக்காளையை அடக்கி தன் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் மிகுந்த கவனத்துடனும் ,அதே போல தன் பழிவாங்கும் செயலில் வீரத்துடனும்,விவேகத்துடனும் பிச்சியின் கதாபாத்திரத்தை மனதில் பதியுமாறு கதயமைத்துள்ளார்.மேலும் வாடிவாசல் ஒரு நாவலாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டை பற்றிய நுட்பமான தகவல் கொண்ட களஞ்சியமாக படைத்துள்ளார் சி.சு.செல்லப்பா.

இக்குறுநாவலை எழுத்து பத்திரிக்கையின் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பினார் என்ற செய்தியும் உண்டு.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா, காலச்சுவடு
பதிப்பகம், ரூ 40

The Way Home - அன்பின் அழகு


உலகில் உன்னதமான உறவுகளில் ஒன்று பாட்டி - பேரன் உறவு. தாய் சேய் உறவு தான் முதன்மை என்றாலும் , பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அனைவருக்கும் ஒரு படி மேல் பாட்டியின் அன்பு.கட்டுபாடுஅற்ற , அளவில்லா பாசம் மற்றும் குறைவில்லா சுதந்திர வாழ்கை பாட்டியின் அரவணைப்பில் கட்டாயம் கிடைக்கும். அப்படி வளைந்த எனக்கு " தி வே ஹோம் " என்ற படம் பெரும் தாக்கத்தை எற்படுதியது.

சீயோல் நகரில் பிறந்து வளர்ந்த "சங்க் வூ" தன் தாய் வழி பாட்டியிடம் சிறிது காலம் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . "சங்க் வூ " வின் அம்மாவுக்கு புது பணி தேட வேண்டிய அவசியத்தால் , தன் அம்மாவிடம் சிறிது காலம் விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

எழுபத்தி எட்டு வயதான, ஊமை பாட்டியின் குடிசையில் போதிய மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி கிடையாது . மேலும் பாட்டியிடம் இல்லை என்பதே அதிகம் . தான் சீயோலீல் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களும் விளையாட்டு பொருள்களையும் கொண்டு தன் பொழுதை கழிக்கும் சங்க் வூ , தன் பாட்டி காட்டும் அன்பை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறான்.

காலபோக்கில் தான் கொண்டு வந்த நிகழ்பட விளையாட்டு (video game ) மின்கலம் (battery) தீர்ந்து விட தன் பாட்டியிடம் புதிய மின்கலம் (battery) வாங்கி தர வேண்டுகிறான், பாட்டியோ பணமில்லாத காரணத்தால் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள் . ஆத்திரம் அடையும் சங்க் வூ பாட்டியின் காலணிகளை எங்கோ எரிந்து விட்டு பாட்டி பயன்படுத்திய பீங்கான் சாடினயய் எத்தி உடைத்து விடுகிறான். விளையாட வழில்லாமல் , தன் பாட்டி தூங்கும் நேரம் பார்த்து அவள் வெள்ளி கொண்டை ஊசியை திருடி தனக்கு தெரிந்த பாதயில் மின்கலம் (battery) வாங்க செல்கிறான். பல கடைகளில் கேட்டு கிடைகாததால் ஊருக்கு வெளியே ஒரு கடையில் கிடைக்க, அதை வாங்க தன் பாட்டியின் ஆபரணத்தை விற்க முயல, கடைக்காரனோ பாட்டிக்கு தெரிந்தவன் போலும் அவனை தலையில் தட்டி பாட்டியிடம் கொடுக்க சொல்லுகிறான்.


இத்தனை சேட்டைகளையும் செய்யும் சங்க் வூ ,பாட்டி
அவனிடம் கேட்கும் ஒரே உதவி ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுப்பது மட்டுமே அதையும் திட்டி
கொண்டே
கோர்த்துக்கொடுகிறான்.

ஒரு நாள் பாட்டியிடம் பொறித்த கோழியை தின்னக்கேட்க,சங்க் வூ காட்டிய இயே சைகையில் கோழி மட்டுமே அவளுக்கு புலப்படுகிறது.உடனே தான் வளர்த்த பூசணிகளை விற்று மழையில் நனைந்தவாறே கோழியை வாங்கி வந்து அவனுக்கு வேக வைத்த கோழி சமைத்து தருகிறாள்.தான் கேட்ட பொறித்த கோழியை சமைத்து கொடுக்காததால் ஆத்திரம் அடையும் சங்க் வூ உணவை எத்தி விட்டு அழுது கொண்டே உறங்கி விடுகிறான்.நடு இரவில் பசி எடுக்கவே அதே கோழியை உண்டு மறுபடியும் உறங்குகிறான்.முதல் நாள் மழையில் நனைந்த பாட்டி காய்ச்சலில் படுக்கவே அக்கறையுடன் தன் போர்வையை போர்த்தி விட்டு உணவை பரிமாறுகிறான்.




ஒரு நாள் சங்க் வூவும் பாட்டியுடன் சந்தைக்கு செல்கிறான்.அங்கு பேச முடியாத தன் ஊமை பாட்டி பூசணிகளை விற்க படும் அவஸ்தைகளை கண்டு மனம் நோகிறான்.விற்ற பணத்தில் சங்க் வூவுக்கு ஷூவும்,மிட்டாயும் வாங்கி கொடுகிறாள் .அந்த ஊரில் வசிக்கும் தன் சிநேகிதியிடம் சற்று நேரம் பேசி விட்டு கிளம்ப,அந்த சிநேகிதியோ நம் இருவரில் ஒருவர் உயிர் துறக்கும் முன்னர் இன்னொருமுறை வந்து தன்னை பார்க்க வருமாறு வேண்டுகிறாள்.

ஊருக்கு போக தன்னிடம் போதிய காசு இல்லாததால் சங்க் வூவை மட்டும் பேருந்தில் அனுப்பி வைக்கிறாள் . சங்க் வூ ஊருக்கு சென்றதும் தன் பாட்டியை அடுத்தடுத்து வந்த எல்லா பேருந்துகளிலும் தேடி,பின்னர் பாட்டி நடந்தே ஊருக்கு வந்தடைந்ததை கண்டு துடித்துப்போய் "எங்கே போனாய்" என்று உரிமையோடு கேட்டு வேதனைப்படுகிறான் .


எப்போதும் தன் பாட்டியுடன் கோபமாகவும்,பாட்டியின் அன்பை உதாசீனப்படுத்தும் சங்க் வூ,காலப்போக்கில் தன் பாட்டி காட்டும் கட்டுக்கடங்காப்பாசத்தை கண்டு தன் பாட்டியின் மேல் உயிரானான்.

சங்க் வூ பாட்டியை விட்டு கிளம்பி தன் தாயிடம் செல்லும் தருணம் வருகிறது .ஆனால் சங்க் வூக்கு பாட்டியை விட்டு பிரிய மனமில்லாதிருந்தாலும் செய்வதறியாது புழுங்குகிறான் ,பாட்டிக்கு எழுதப்படிக்க தெரியாத காரணத்தால் "எனக்கு உடம்பு சரியில்லை" என்றும் " தங்கள் பிரிவினால் நான் மிகவும் வருந்துகிறேன்" என்றும் தபால் அட்டையில் வரைந்து , இவை இரண்டில் அந்த அந்த சுழ்நிலைக்கு யட்ப அனுப்புமாறு வேண்டுகிறான் . மேலும் தன் பாட்டிக்கு எல்லா ஊசிக்கு நூல் கோர்த்துக்கொடுத்துவிட்டு மிகுந்த வேதனையுடம் அழுது கொண்டே உறங்கச்செல்றான்.

மறு நாள் தன்னை கூடிச்செல்ல வந்த தன் தாயுடன் கிளம்பிய சங்க் வூவை பிரிய மனமில்லாமல் வழியனுப்பிவிட்டு, ஆதரவாக யாருமே இல்லாத தன்னுடைய பழைய வாழ்கையை தொடர தளர்வடைந்து தன் குடிசையை நோக்கி நடந்து செல்கிறாள் பாட்டி. படமும் நெரிவு பெறுகிறது .

அன்பு என்ற மொழியால் பேசிய ஊமை பாட்டி நாம் மனதில் நீங்கா இடம் பிடிகிறாள் .

கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா


இராவுத்தர் ,லெப்பை இவை இரண்டும் தமிழை தாய்மொழியாக கொண்ட இரு இஸ்லாமிய பிரிவுகள்.பொருளதாரத்தை மையப்படுத்தி இராவுத்தர் உசத்தி, லெப்பை கீழ் என்று பிரிக்கப்பட்டவர்கள்.


உருவ வழிப்பாட்டுக்குத் தடை , வீட்டில் பிராணிகள் வளர்க்கத் தடை போன்ற கோட்பாடுகள் உள்ள சமூகத்தில் , முற்போக்கு சிந்தனை கொண்ட , இராவுத்தர்மார் ஒடுக்கத்தை எதிர்க்கும் எண்ணம் கொண்ட லெப்பை சமூகத்தில் பிறந்த கருத்த லெப்பையின் வாழ்வும் மரணமும் பற்றிய கதை .

தன் பாட்டி ராதிம்மாவிடம் நாயகத்தின் உருவத்தை கேட்டு மனனம் செய்து அடுத்தநாள் அதை படமாக வரைகின்றான் கருத்த லெப்பை . குழந்தைகளுக்கு விதவிதமாய் கைக்கடிகாரமும் மோதிரமுமாக மிட்டாய் செய்து தரும் அமீது மூலமாக தான் வரைந்த நாயகதின் படத்தை களிமண் உருவமாக செய்யப் பெறுகிறான். தனால் கல்லெறி பட்டு உயிரை விடுகிறான்.

கதைக்கு மாந்தர்கள் சுமையாக இல்லாமல் , நமக்கு அவர்கள் நன்கு அறிமுகமாகும் முன்னரே அவர்களுக்கு திரை மூடப்படுகிறது. உதாரணத்துக்கு
அபுபக்கர்,சின்னப்பேச்சி,ராதிம்மா மேலும் பலர் .

கதையின் போக்கினை கதாசிரியர் நன்றாக கையாண்டு, வாசகரை மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார் .

கதாசிரியர் லெப்பை இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை அழகாகவும் , இராவுத்தர்-லெப்பை வேறுபாடுகளை உறுத்தாத முறையிலும் பதிவு செய்துள்ளார்.


கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.