The Diving Bell and the butterfly


சரிரம் சிறையாகி போக , சிந்தனைகள் யாவும் சிறைப்படுத்த பட, சிறுவயது முதல் தன் எண்ணங்களுக்கு கட்டுப்பட்ட கரங்களும், கால்களும் செயல் இழந்து , சிறு செயலுக்கு கூட பிறரை எதிர்நோக்கும் கொடிய நிலையாக்கிவிடுமாம் வாதம் நோய் . வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் உள் உணர்வை பிறரிடம் பகிர முடியாதபடி நாவிழந்து பலபேர் பாதிக்க கண்டு உள்ளேன். வாதம் பெரிய கொடிய நிலமை தான் என்னவோ, தன்னை ஒருவன் ஏமாற்றினால் அவன் கை,கால் விளங்காமல் போக வேண்டும் என்று சாபம் விடுகிறார்கள்.

வாதத்தால் பாதிக்கப்பட்டு வரலாறு படைத்தவர்கள் பலர், அவர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "elle" என்ற பேஷன் இதழின் பதிப்பாசிரியர் ஜீன் டொமனிக் புபி (Jean-Dominique Bauby) யும் ஒருவர். அவருடைய நாற்பதாவுது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தன் இடது கண் மட்டும் உயிர் இருக்க , பிற உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த நிலையில் " தி டைவிங் பெல் அண்ட் தி பட்டர்பிலை (The Diving Bell and the butterfly) " என்ற புத்தகத்தை எழுதி தன் வரலாறை திருத்தி எழுதியவர் . அவரை பற்றிய படம் தான் இந்த The Diving Bell and the butterfly.

படம் முழுக்க Bauby -யின் நினைவுகளோடும் , அவர் உள் உணர்வோடும் நாம் பயணிக்கிறோம். அதற்கு ஏற்றார் போலவே, ஆரம்பத்தில் ஒளிப்பதிவும் அவரின் இடது கண் பார்வையின் கோணமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.படம் துவக்கமே Bauby -க்கு லாக்-இன் ஷின்றோம்(Lock-in Syndrome) எற்பட்டுயுள்ளதகவும், தலை முதல் கால் வரை செயல் இழந்து விட்டதாகவும் அவருடய இடது கண்ணும்,சிந்தனையும் சாதாரணமாக உள்ளதாக நரம்பியல் நிபுனர் விளக்குகின்றார். பிறர் Bauby - யிடம் பேசும் போது அருகில் நின்று நேராக அவர் கண் முன்னே பேச வேண்டும் என்றும் இடது ஓரமகவோ அல்லது வலது ஓரமகவோ நின்று பேசினால் Bauby -யால் பார்க்க முடியாது என்றும் விவரிகின்றார்.

Bauby -
யை இவ்வாதத்தில் இருந்து மீட்க உடல் பயிற்சியாளர்(Physical Therapist), பேச்சுப் பயிற்சியாளர்(Speech Therapist ) உறுதுணையாக இருக்கின்றனர். பிறரிடம் பேச தன் இடது கண் மட்டும் உறுதுணையாக இருப்பதால் ஒரு உத்தியை கற்றுக் கொடுகிறாள் பேச்சுப் பயிற்சியாளர்யான முரியா(mauria).Bauby - யிடம் பேச விரும்பியவர்கள் கேள்விக்களால் மட்டுமே பேச(கேட்க) வேண்டும் என்றும், அதற்கு அவர் ஒரு முறை கண் சிமிட்டினால் "ஆமாம்" என்றும், இருமுறை சிமிட்டினால் "இல்லை" என்றும் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள் முரியா.

மேலும் Bauby - யிடம் பேசபவர் ஆங்கில எழுத்துகளை வரிசையாக சொல்ல, தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் சிமிட்டி "ஆமாம்" என்று சொல்லி, அதை போல பிற எழுத்துகளை சேர்த்து தான் சொல்ல வந்த வாக்கியத்தை கூறுகிறான். தான் பணி செய்து வந்த "elle" இதழில் எழுதி வந்த புத்தகத்தை எழுதி முடிக்க முயலுகிறான். அவன் எண்ணத்தை பதிப்பாளர்களிடம் தெரிவிக்க, சம்மதம் அளிக்கின்றனர் .தான் சொல்ல வேண்டியதை முற்றாகவும், பொறுமையாகவும் சொல்லி புத்தகத்தை எழுதி , பிரசுரிக்க செய்து , நல்ல விமர்சனம் பெறுகிறான் . புத்தகம் வெளியான சில தினங்களில் நிமோனியா(pnemonia)வால் பாதிக்கபட்டு உயிர் துறக்கிறார்.

படம் முளுக்க Bauby தன் வரலாறு விவரிதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது . வாதத்தால் பாதிக்கபட்ட தன் முகத்தை பார்க்க அவன் மனம் மறுப்பதையும் , தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கால் பந்தாட்டத்தை பார்த்து கொண்டு இருக்கையில், Bauby -யை பரிசோதித்த பணியாளர் போகையில் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு செல்லும் போது கோபத்தால் அவன் மனது குமறும்போதும், வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை நாம் உணர முடிகிறது. தன் பிறந்தநாள் அன்று Bauby - யின் தந்தை தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவிக்கும் போது , பணிப்பெண் முலமாக தன் பிரியத்தை சொல்ல , தன் மகன் சொல்வது போல வருமா என்று அழும் தந்தையை நினைத்து அழும் Bauby ஒரு நெருடலான காட்சி.

அருமையான திரைகதை , ஒளிப்பதிவு என்று விளங்குகிறது இந்த படம் . இந்த படத்தின் டைரக்டர் 2006 CANNES திரைப்படவிழாவில் சிறந்த டைரக்டர்கான விருதைப் பெற்றார் .